உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
2020 மே தினத்தை ஒட்டி நான் எழுதியது. இன்றைக்கு மே தினம்! கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட மனித சமூகத்தின் இயக்கத்தையே முடக்கிவைத்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டின் மே தினம் இன்றைக்கு வந்திருக்கிறது! உண்மையில் இந்த வைரஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. மிகக் கொடியது. இதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. இந்த வைரஸை நாம் ஒழித்தே ஆக வேண்டும். அந்த முயற்சிகளில் நாம் இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறோம். இந்த வைரஸுக்கு எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்து, நாம் அதனிடம் இருந்து தப்பித்துவிடக்கூட முடியும். ஆனால், இந்த வைரஸ், இந்த உலகின் மிகக் கொடூரமான பிரச்சனைகளை நமக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. அந்தப் பிரச்சனைகளை நாம் எப்படித் தீர்க்கப் போகிறோம்? இந்த உலகம் சுரண்டலற்ற, அனைத்து மனிதர்களுக்குமான உலகம் என்பதை எப்படி நாம் உறுதிசெய்யப் போகிறோம். இதுதான் நம்முன் நிற்கும் கேள்வி. இந்தக் கேள்வி உலகத் தொழிலாளர் தினமான இன்றைக்கு, மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஏனென்றால் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை உலகத் தொழிலாளர்கள் தான் பெற்றுத்தர முடியும். இதைக் கடந்த 200 ஆண்டுகாலமாக வரலாறு நமக்குத் தொடர...