பூமியைப் பற்றிச் சொல்கிறோம்...
நவம்பர் 9 புகழ்பெற்ற வானியலாளர் கார்ல் சகானின் பிறந்த தினம் அவர் வழிகாட்டியாக செயல்பட்டு நடத்திய, ஒரு சுவாரஸ்யான தகவல் பகிர்வு திட்டம் பற்றிய எனது கட்டுரை இது பட்டம் மாணவர் பதிப்பில் 19.1.2017ல் வெளிவந்தது விண்வெளியில் பூமியைத் தாண்டி கோடானுகோடி ஒளியாண்டு தூரம் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். பூமியைப் போன்ற ஒரு கோளைச் சேர்ந்த அறிவுத்திறன் மிக்க உயிரினங்களைச் சந்திக்கிறீர்கள். உங்களைப் பற்றியும், நீங்கள் வாழும் பூமியைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும். என்ன விதமான புகைப்படங்களையும் தகவல்களையும் உங்களது பயணத்தின்போது நீங்கள் எடுத்துச் செல்வீர்கள்? இப்படி ஒரு சூழல், வருமா வராதா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும், பூமியில் இருந்து ஆய்வு விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, விஞ்ஞானிகள் பூமியைப் பற்றிய சில முக்கியமான தகவல்களைத் தொகுத்து விண்கலங்களில் வைத்து அனுப்பி வருகிறார்கள். எப்போதாவது வேற்றுக் கிரகங்களைச் சேர்ந்த அறிவுஜீவிகள் நம் விண்கலன்களை எதிர்கொள்ள நேரிட்டால், நமது பூமி எப்படிப்பட்டது? அதன் இயற்கை வளங்கள் என்ன? எத்தகைய உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன? பூமியின் உ...